டயட்டீஷியன் அம்பிகா சேகர்சமையலில் ருசி என்பதை மீறி, முதலில் நம் கவனம் ஈர்ப்பது அதன் மணம். உப்பு, புளி, காரம் இல்லாத உணவு எப்படி ருசிப்பதில்லையோ, அப்படித்தான் மணமில்லாத சாப்பாடும். சமையலுக்கு மணத்தை மட்டுமின்றி, கூடுதலாக சுவையையும் கொடுப்பவைதான் மசாலா பொருட்கள். அந்த வகையில் அன்றாடச் சமையலில் நாம் உபயோகிக்கிற கடுகு, பெருங்காயத்தில் தொடங்கி, அரிதாக உபயோகிக்கிற பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் வரை அனைத்துக்கும் மாபெரும் மருத்துவ குணங்களும் உண்டு. சில வகையான மசாலா பொருட் களுக்கு பசியைத்தூண்டும் சக்தியும்உண்டு.இன்னும் சிலது நம்குடலைசுத்தப்படுத்தக் கூடியவை.
பட்டை மசாலா பொருட்களின் ராணி என்று பார்த்தால் பட்டை எனலாம். அதற்கொரு ஆழமான மணமும் மருத்துவக் குணங்களும் அதிகம். பட்டையை லேசாக வறுத்துப் பொடித்து, அரை டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு கட்டுப் பாட்டுக்குள் வரும்.
பூஞ்சைத் தொற்று மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு பட்டைப் பொடியை வெளிப்பூச்சாகத் தடவினால் குணம் தெரியும். பெரும்பாலான மருத்துவர்கள், பிரியாணி வகையறாக்களை நிறுத்தச் சொல்லியோ, குறைக்கச் சொல்லியோ அட்வைஸ் செய்வார்கள். காரணம், அதிலுள்ள அதிகபட்ச கொழுப்பு. சுவையின் காரணமாக அளவுக்கு மீறியும் உட்கொள்கிறோம். தவிர்க்க முடியாமல் இப்படி கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள நேர்ந்தால், உடனே மேலே சொன்னபடி பட்டைக் கஷாயம் குடித்தால், உடலில் அதிகக் கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படும். வளர்சிதை மாற்றச் செயல்பாடு அதிகமாகி, உடல் எடையும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
கிராம்பு சமையலுக்கு சுவையையும் அதைவிட அதிகமாக மணத்தையும் கொடுக்கக்கூடியது. இதில் சிவீஸீமீனீமீநீ கிறீபீமீலீஹ்பீமீ என்கிற எண்ணெய் இருக்கிறது. இதுவே கிராம்பின் மருத்துவ குணத்துக்குக் காரணம். பல் வலிக்கு கிராம்பு பிரமாதமான மருந்து. ஜலதோஷம், தொண்டை வலி போன்ற பல உபாதைகளுக்கும் கிராம்பு தைலம் கலந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் உடனடி நிவாரணம் தெரியும்.
தசைப்பிடிப்பை நீக்கும் சக்தியும் இதற்கு உண்டு. இந்த எண்ணெய் கலந்து மசாஜ் செய்கிற போது பலனை உணரலாம். ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு வலி உள்ள இடத்தில் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். அடிபட்டுக் கண்ணிப் போன இடத்தில் தடவினாலும் குணம் தெரியும். என்னதான் மருத்துவ குணம் நிறைந்தது என்றாலும், இதை அளவுக்கதிகமாக எடுக்கக் கூடாது. சிறுகுடலைத் தூண்டி, பேதியைக் கிளப்பி விடும். அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும்.
ஏலக்காய் சுவையும் மணமும் கொண்ட ஏலக்காய்க்கு புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் சக்தி உண்டாம். இதில் அளவுக்கதிகமான ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. வாய் துர்நாற்றத்தை விரட்டும். மன அழுத்தத்தை விரட்டும். பெருங்காயம்இந்தியச் சமையலின் பிரத்யேக மணத்துக்கும் சுவைக்கும் முக்கிய காரணம் அதில் சேர்க்கப்படுகிற பெருங்காயம். பெருங்காயம் என்பது ஒரு மரத்தின் பிசின். இது செரிமானத்துக்கு உதவக்கூடியது. புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளில் கட்டாயம் பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
அந்தக் காலங்களில் வாழைப் பழத்தினுள் பெருங்காய உருண்டையை வைத்துக் கொடுப்பார்கள். அதன் மூலம் வயிற்றிலுள்ள பூச்சிகள் அழியும். வாயுப்பிடிப்பு காரணமாக வயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் போது பெருங்காயம் சேர்த்த நீர்மோர் குடித்தால் உடனடியாக நிவாரணம் பெறலாம். கொழுப்பு அதிகமுள்ள உணவுகளின் மூலம் உடலில் அதிக கொழுப்பு சேர்வதைத் தவிர்க்கவும் பெருங்காயம் உதவும். பெருங்காயத் தூளைவிட, கட்டிப் பெருங்காயமே எப்போதும் சிறந்தது. கடுகு இது மிகச்சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட். எந்த உணவிலுமுள்ள நச்சுத் தன் மையை நீக்கவல்லது.
தாளிப்புக்குப் பிரதானமாக நாம் உபயோகிக்கிற கடுகை, பொடி செய்து, சாண்ட்விட்ச், சாலட் போன்றவற்றில் வெளி நாட்டினர் அதிகம் பயன்படுத்து கிறார்கள். சோம்பு செரிமான சக்திக்குப் பெரிதும் உதவக் கூடியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு வலி வரும் போது, அது உண்மையான பிரசவ வலிதானா என்பதைக் கண்டுபிடிக்க சோம்புக் கஷாயம் கொடுப்பது வழக்கம். பொய் வலி என்றால், கஷாயம் கொடுத்ததும் அடங்கி விடும். உண்மையான வலி என்றால் அதை இன்னும் தூண்டிவிடும்.
ஜாதிக்காய் சமையலுக்கு வாசனையைக் கொடுக்கவே அதிகளவில் உபயோகப்படுத்தப் படுகிறது. இனிப்பு வகைகளிலும் பிரியாணியிலும் முக்கியமாக சேர்க்கப்படுகிறது. இதற்கும் மருத்துவ குணங்கள் உண்டு. முறையற்ற மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும். செரிமான சக்திக்கு உதவும். ஜாதிக்காயை மிக மிகக் குறைந்த அளவுதான் உபயோகிக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இதைக் கொடுத்தால், கரு கலைந்து போகும் அபாயம் ஏற்படலாம். அளவை மிஞ்சும் போது, இது நஞ்சாகக் கூடியது.

No comments:
Post a Comment