உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும் - "ஆன்டி-ஆக்ஸிடன்ட்" அதிகம் இருக்கும் 15 உணவுகள்!


ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பது ஒரு இரசாயனக் கலவைகள். இவை உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்ற உதவும். இந்த மாசுக்கள் உடலில் இருந்தால், உடலில் நோய்கள் வந்து தங்கிவிடும்.
 
   எனவே உடலைத் தூய்மைப் படுத்தி பாதுகாப்பதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இத்தகைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்பன கரோட்டினாய்டுகள், ஃப்ளேவோனாய்டுகள், மெலடோனின், வைட்டமின்களில் , சி, , பைட்டோ கெமிக்கல்களான பீட்டா-கரோட்டீன் மற்றும் லைகோபைன் மற்றும் தாது சத்துக்களான செலீனியம் மற்றும் ஜிங்கு போன்றவை. இவை அனைத்து உடலில் போதிய அளவு இருந்தால், உடலில் உள்ள ரேடிக்கல்கள், கழிவுகளாக மாற்றப்பட்டு, மலம் மற்றும் சிறுநீர் வழியே வெளியேற்றப்படும்.

  
எனவே தான், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் முக்கியமாக தேவைப்படுகிறது. எனவே ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டியுள்ளது. இந்த உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதோடு, சருமமும் அழகாக மின்னும். அதுமட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், டைப்-2 நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்றவற்றை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.
1.      கிவி
2.      பரட்டைக்கீரை
3.      பசலைக் கீரை
4.      அவகேடோ
5.      களைக்கோசு
6.      பீட்ரூட்
7.      ப்ராக்கோலி
8.      ஆப்பிள்
9.      பூண்டு
10.  குடைமிளகாய்
11.  ஆரஞ்சு
12.  பீன்ஸ்
13.  பெர்ரிப் பழங்கள்
14.  மாதுளை
15.  தக்காளி

No comments:

Post a Comment