கோதுமை இடியாப்பம்...!



தேவையான பொருட்கள் :

வறுத்த கோதுமை மாவு - 2 கப்
தண்ணீர் அளவு - 2 1/2 டம்ளர்...
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை :

• ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்காமல் வெதுவெதுப்பாக சுட வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மாவு, உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். (மாவு கையில் ஒட்ட கூடாது)

• இடியாப்ப தட்டில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

• பிசைந்த மாவை தட்டில் இடியாப்பமாக பிழியவும்.

• இட்லி சட்டியில் 
 
7 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் கோதுமை இடியாப்பம் ரெடி.

• இது மிகவும் சத்தானது உணவாகும்.


No comments:

Post a Comment