104 - தொலைபேசியில் கிடைக்கும் மருத்துவ சேவைகள்...!

தமிழக முதல்வர் ஜெயலலிதா 104 மருத்துவ சேவையை கடந்த 2ஆம் தேதி தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளில் டாக்டர், நர்ஸ் ஆகியோர் பணியில் இல்லையா? 104 தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு புகார் செய்தால் ...குறைகள் சரி செய்யப்படும். இது தவிர முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய், சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்த தானம், கண்தானம் குறித்த தகவல்கள், ரத்த தானம், கண்தானம் குறித்த தகவல்கள், தொற்றுநோய், தொற்றாத நோய் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறைபாடு குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட சலுகை உள்ள மருத்துவமனைகள்,மனநல ஆலோசனைகள், HIV பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள், இதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை குறித்த தகவல்கள் என் மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் 104 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

104-மருத்துவ சேவைக்கான அலுவலகம் சென்னை, திருவல்லிக்கேணிகஸ்தூரி பாய், காந்தி தாய் சேய் நல்ல மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வருகிறது. மக்களின் அழைப்புகளுக்கு பதில் அஅளிப்பதற்காக 100 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர அரசு மருத்துவர்கள் 5 பேர் பணியில் உள்ளனர்.

வீட்டில் ஒருவருக்கும் உடல்நிலை சரியில்லை என்று சொன்னால் முதல் கட்டமாக என்ன செய்ய வேண்டும்? என்ன மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும்? அருகில் உள்ள மருத்துவமனை விபரம் ஆகிய தகவல்களைப் பெறலாம். தமிழக அரசின் இந்த சேவையை பொது மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment